2020 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

நவம்பர் 20, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரை மிதமான பின்னடைவு (45 / 100)


இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். செவ்வாய் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிலும், குரு 3ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றத்தை உண்டாக்கக் கூடும். எனினும் சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து தொடர்ந்து உங்களுக்கு பாதுகாப்பு தருவார். அதனால் விடயங்கள் மோசமாகாது. நீங்கள் உங்கள் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். அதிகரிக்கும் மருத்துவ மற்றும் பயண செலவுகள் உங்கள் சேமிப்பை சற்று பாதிக்கக் கூடும்.
உங்கள் அலுவலகத்தில் சில மாற்றங்கள் ஏற்படக் கூடும். புது நபர்கள் உங்கள் குழுவில் சேருவார்கள். அலுவலகத்தில் அரசியல் அதிகரிக்கக் கூடும். எனினும், நீங்கள் உங்கள் ப்ரோஜெக்ட்டை, சனி பகவானின் பலத்தோடு தக்க நேரத்தில் முடிப்பீர்கள். தொழிலதிபர்கள் சில பிரச்சனைகளை தங்கள் போட்டியாளர்கள் அல்லது பங்குதாரர்கள் மூலம் சந்திக்க நேரிடும்.


முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. விசா குறித்த விடயங்களில் அதிக தாமதங்கள் ஏற்படக் கூடும். முடிந்த வரை பணம் கடன் வாங்குவதோ, அல்லது கடன் கொடுப்பதோ, இரண்டையும் தவிர்ப்பது நல்லது. பங்கு சந்தை வர்த்தகத்தில் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் இருப்பது நல்லது. உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல், ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.



Prev Topic

Next Topic