2020 புத்தாண்டு உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

உடல் நலம்


கடந்த 2019ஆம் ஆண்டு உங்களுக்கு ஏற்பட்ட உடல் உபாதைகள், மற்றும் மன உளைச்சல்களை பற்றி விவரிக்க வார்த்தைகளே இருக்காது என்று கூறலாம். அக்டோபர் 2019 வரை உங்கள் சொந்த வாழ்க்கையிலும், உத்தியோகத்திலும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் உங்கள் சக்தியின் அளவு அதிக அளவில் குறைந்திருக்கும். சரியான தூக்கம் இல்லாமல் போனதால் உங்கள் உடல் நலமும் பாதித்திருந்திருக்கும். உங்களுக்கு வலியின் காரணமாக மயக்கம் ஏற்பட்டு நீங்கள் கீழே விளுந்திருந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
தற்போது குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கும், சனி பகவான் 3ஆம் வீட்டிற்கும் பெயருவதால், நீங்கள் உங்கள் சக்தியையும், மன பலத்தையும் மீண்டும் பெறுவீர்கள். உங்களுக்கு இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் போன தூக்கம் தற்போது கிடைக்கும். உங்களுக்கு சரியான மருந்து கிடைத்து விரைவாக உங்கள் உடல் நல பிரச்சனைகள் குணமடையும். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஹனுமான் சாலிச கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.


விளையாட்டில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். நல்ல உற்சாகத்தோடு இருப்பதால், மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். அழகு குறித்த அறுவை சிகிச்சை செய்து உங்கள் தோற்றத்தை மேம்படுத்த இது நல்ல நேரம். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். உங்களுக்கு நல்ல ஈர்ப்பு சக்தி உண்டாகும். நீங்கள் செப்டம்பர் வாக்கில் காதலில் விழுந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.


Prev Topic

Next Topic