2020 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

வழக்கு


குரு உங்கள் ராசியின் 1ஆம் வீட்டிலும், சனி பகவான் மற்றும் கேது 2ஆம் வீட்டிலும், ராகு 9ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உஞளுக்கு வழக்கு குறித்த விடயங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு மிக மோசமான சூழலையும், இழப்புகளையும் உண்டாக்கி இருந்திருக்கக் கூடும். வழக்கால் நீங்கள் அதிக பணத்தை இழந்திருப்பீர்கள். தற்போது நிலுவையில் இருக்கும் வழக்கில் நீங்கள் இந்த ஆண்டு நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்களால் உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்து சரியான சாட்சிகளையும் தர முடியும். ஒரு நல்ல வழக்கறிஞரும் உங்களுக்கு கிடைப்பார்.
குரு உங்கள் ரூன ரோக சத்ரு ஸ்தானத்தையும், அஷ்டம ஸ்தானத்தையும் பார்வை இடுவதால், உங்களது மறைமுக எதிரிகள் பலம் இழப்பார்கள். உங்களால் மார்ச் 2020 வாக்கில் கிரிமினல் வழக்குகளில் இருந்து வெளி வர முடியும். சனி பகவான் மற்றும் குருவின் பலத்தால், நீங்கள் பூர்வீக சொத்துக்கள் விடயங்களில் வெற்றி பெறுவீர்கள். சொத்துக்களை உங்கள் பெயரில் மாற்ற இது நல்ல நேரம். சுதர்சன மகா மந்திரம் கேட்டு பெருமாளை வணங்கி வந்தால், விரைவாக வெற்றியையும், நிதி நிலையில் லாபத்தையும் பெறுவீர்கள்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic