![]() | 2020 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | காதல் |
காதல்
ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வரை மிக மோசமான சூழலை சந்தித்திருந்திருப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டைகளாலும், கருத்து வேறுபாடுகளாலும், நீங்கள் பிரிந்திருப்பீர்கள். இந்த ஆண்டு நீங்கள் மீண்டும் சேர முயற்சி செய்யலாம். எனினும், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் தேவை,. இல்லையென்றால், நீங்கள் நிரந்தரமான பிரிவை ஏற்றுக் கொள்ள உங்கள் மனதை தயார்படுத்திக் கொண்டு, புது உறவை ஏற்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையை தொடர வேண்டும்.
நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வரனை பெப்ரவரி அல்லது மார்ச் 2020க்கு மேல் பார்க்கத் தொடங்கலாம். உங்கள் காதலில் பிரிவு ஏற்பட்டு, தொலை அடைந்திருந்தால், பெற்றோர்கள் பார்க்கும் வரனை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடருவது நல்லது. உங்கள் பெற்றோகளிடம் இருந்து காதல் திருமணத்திற்கு ஒப்புதல் வாங்க இது நல்ல நேரம். எனினும் மார்ச் 2020க்குள் அல்லது செப்டம்பர் 2020க்கு மேல் திருமணம் செய்து கொள்வது நல்லது.
திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியதோடு இருப்பார்கள. நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாக்கியத்தை பெறுவார்கள். IVF மற்றும் IUI போன்ற சிகிச்சை முறைகள் உங்களுக்கு நேர்மறை பலனைத் தரும். மேலும் செப்டம்பர் 2020 வாக்கில் நீங்கள் உங்கள் கனவு சுற்றுலா செல்ல திட்டமிடலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் காதலிலும் விழுவீர்கள்.
Prev Topic
Next Topic