![]() | 2020 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
கடந்த 2019ஆம் ஆண்டு உங்களுக்கு மிக மோசமான ஒரு ஆண்டாக இருந்திருக்கும். உங்களுக்கு பல கசப்பான அனுபவங்களும், அவமானங்களும் ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வரை நிகழ்ந்திருக்கும். இந்த புது ஆண்டு உங்களுக்கு நல்ல பலன்களோடு உங்களை வரவேற்கின்றது. குரு மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்கள். மேலும் ஜனவரி 23, 2020 முதல் நீங்கள் ஏழரை சனியில் இருந்தும் வெளி வருகுரீர்கள். முக்கிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நிலையில் சஞ்சரிகின்றனர். இந்த ஆண்டு நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள்.
நீண்ட காலமாக உங்களுக்கு இருந்து மன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருந்து வெளி வருவீர்கள். உங்களுக்கு நல்ல நேர்மறை சக்திகள் கிடைக்கும். உங்கள் நிதி நிலையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு பங்கு சந்தையில் நல்ல லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது வீட்டிற்கு குடி பெயருவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள.
வெளி நாட்டு பயணம் செய்ய உங்களுக்கு வாய்ப்புகள் வரும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் ஒரு முக்கியத்துவர் அந்தஸ்த்தை பெறுவீர்கள். இந்த ஆண்டை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டில் ஆகி விட முயர்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic