2020 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

மார்ச் 29, 2020 to முதல் ஜூலை 01, 2020 வரை மிதமான பின்னடைவு (55 / 100)


குரு சனி பகவானோடு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் இணைந்து சஞ்சரிப்பார். இந்த பாகத்தில் சில பின்னடைவுகளை நீங்கள் எதிர் பார்க்கலாம். நீங்கள் நல்ல பலனைப் பெற கடுமையாக உழைக்க வேண்டும். நீண்ட கால அடிப்படையில் உங்கள் நேரம் நன்றாக இருப்பதால், தற்போது நடப்பதை எண்ணி நீங்கள் அதிகம் வருத்தப்பட வேண்டாம். பொறுமையாக இருந்து, அதிக முயற்சிகளோடு உங்கள் வேலைகளைத் தொடருங்கள். நீங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெறுவீர்கள்.
இந்த பாகத்தில் உங்கள் உடல் நலம் தொடர்ந்து நல்ல நிலையில் இருக்கும். உங்கள் குடும்பத்தில் எதிர்பாராத சில பிரச்சனைகள் ஏற்படக் கூடும். அதை சரி செய்ய நீங்கள் அதை நேரம் செலவு செய்ய வேண்டிய தேவை இருக்கும். உங்கள் குடும்பத்தினர்கள் உங்களுக்கு தொடர்ந்து நல்ல உறுதுணையாக இருப்பார்கள்.


உங்கள் அலுவலகத்தில் சில நிர்வாக அரசியல் நடக்கக் கூடும். எனினும், உங்கள் எதிரிகளை விட நீங்கள் அதிகம் சக்தி பெற்று இருப்பீர்கள். அதனால், உங்களால் உங்கள் ப்ரோஜெக்ட்டை எவ்வளவு அரசியல் நடந்தாலும், அதனை எதிர்த்து சரியான நேரத்தில் முடித்து வெற்றி பெறுவீர்கள். இந்த காலகட்டம் உங்கள் அலுவலகத்தில் அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். அதனால் நீங்கள் அதிக நேரத்தை அலுவலகத்தில் செலவிட வேண்டிய சூழல் உண்டாகலாம். தொழிலதிபர்கள் தங்கள் ப்ரோஜெக்ட்டை செயல்படுத்துவதில் மும்மரமாக இருப்பார்கள். சுய தொழில் புரிவோர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவார்கள.
உங்கள் நிதி நிலை சுமாராக இருக்கும். நல்ல வருமானம் இருக்கும், ஆனாலும் செலவுகளும் அதிகமாக இருக்கும். வங்கி கடனுக்கு தற்போது விண்ணப்பிப்பது நல்ல யோசனையாக இருக்காது. உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தேக்கமடையலாம். இந்த பாகத்தில் வெளிநாட்டு பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. நீண்ட கால முதலீடு செய்தவர்களுக்கு மட்டுமே பங்கு சந்தை வர்த்தகம் லாபம் தரும் வகையில் இருக்கும். ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் உங்களுக்கு நட்டத்தை உண்டாக்கக் கூடும்.




Prev Topic

Next Topic