![]() | 2020 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | மூன்றாம் பாகம் |
ஜூலை 01, 2020 முதல் நவம்பர் 20, 2020 வரை பொற்காலம் (90 / 100)
குரு மீண்டும் தனுசு ராசிக்கு பெயர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். உங்களுக்கு கடந்த நாட்களில் ஏற்பட்ட சிறிய பின்னடைவுகள் தற்போது முடிவுக்கு வரும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு பொற்காலத்தை பெறப் போகுரீர்கள். குரு பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், சனி பகவான் 3ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியையும், வெற்றியையும் அதிகப்படுத்துவார்கள். இந்த பாகம் உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த காலாக்ட்டமாக இருக்கும். உங்களது நீண்ட கால கனவுகள் நினைவாகும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கையின் அளவு அதிகமாக இருக்கும்.
உங்களுக்கு பண மழை உண்டாகும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் பணக்காரராகவும் ஆவீர்கள். உங்கள் மனைவி/கணவன் மற்றும் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் செய்யும் எந்த காரியமாக இருந்தாலும், அது பெரிய அளவு வெற்றியைப் பெரும். நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருப்பீர்கள். உங்களை நோக்கி மக்கள் ஈர்க்கப் படுவார்கள்.
நீங்கள் காதலில் விழுவீர்கள். ஒரு நல்ல வரனை பார்த்து, திருமணம் செய்து கொள்ள இது சிறப்பான நேரம். திருமணம் ஆன தம்பதியினர்கள் நல்ல அன்யுனியதோடு இந்த பாக காலகட்டத்தில் இருப்பார்கள். குழந்தை பேரு பெரும் பாக்கியம் சிறப்பாக உள்ளது/ சுப காரியங்கள் நிகழ்த்துவதில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு போன, சன்மானங்கள் போன்றவை கிடைப்பதால் மகில்ச்யாக இருப்பீர்கள். புது வேலை வாய்ப்பு கிடைத்து, பெரிய நிறுவனத்தில் சேர இது நல்ல நேரம். உங்கள் உத்தியோக வாழ்க்கையை எளிதாக சமாளிப்பீர்கள். தொழிலதிபர்கள் இந்த காலகட்டத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். மேலும் உங்கள் தொழிலை விரிவு படுத்தவும் முயற்சி செய்யலாம். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். முடிந்த வரை தானம், தர்மம் செய்ய முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic