2020 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


ஆகஸ்ட் 2019 முதல் நவம்பர் 2019 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்தில் பெரும் அளவு பணத்தை இழந்திருக்கக் கூடும். பங்கு சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இரக்கத்தால் நீங்கள் மிக மோசமான நிலையை சந்தித்திருந்திருப்பீர்கள். இந்த ஆண்டு பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.
நாள் வர்த்தகம் மற்றும் ஸ்பெகிலேடிவ் வர்த்தகம் செய்பவர்கள் ஒரு நல்ல ஏற்றத்தை காண்பார்கள். நீண்ட கால முதலீடு செய்பவர்கள் சிறப்பான லாபத்தை ஆகஸ்ட் 2020க்கு மேல் காண்பார்கள். நீங்கள் தங்க கட்டி மற்றும் தங்க சுரங்க நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். உங்கள் வங்கி கடன் எந்த சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். நீங்கள் சொத்துக்கள் வைத்திருந்தாள், அதன் மதிப்பு அதிகரிக்கும்.


உங்கள் வீட்டின் மதிப்பு அதிகரிப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சனி பகவான் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், நீண்ட கால ரியல் எஸ்டேட் முதலீடுகள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நீங்கள் சொத்துக்களை அதிக விலைக்கு விற்கலாம். மேலும் பல சொத்துக்களை குறைந்த விலைக்கு வாங்கலாம். அப்படி வாங்கும் சொத்துக்கள் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.


Prev Topic

Next Topic