2020 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

வேலை / உத்தியோகம்


கடந்த 2019ஆம் ஆண்டு உங்கள் உத்தியோகத்தில் அதிக பிரச்சனைகளை சந்தித்திருந்திருப்பீர்கள். முக்கிய கிரகங்கள் உங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு சஞ்சரித்ததால், எதிர்பாராத பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கும். ஆகஸ்ட் 2020 முதல் அக்டோபர் 2020 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்திருக்கவும் கூடும். மேலும் மோசமான சூழலில் உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து அக்டோபர் / நவம்பர் 2019 வாக்கில் உங்கள் தாய் நாடு திரும்பி இருந்திருப்பீர்கள். கடந்த ஆண்டு உங்களுக்கு சரியாக போனஸ் மற்றும் சன்மானங்கள் கிடைக்காததால், அதிக ஏமாற்றத்தை சந்தித்திருந்திருப்பீர்கள்.
இந்த புதிய 2020ஆம் ஆண்டை நீங்கள் நல்ல மகிழ்ச்சியான விடயங்களுடன் தொடங்குவீர்கள். குரு மற்றும் சனி பகவான், இருவரும் சிறப்பான இடத்தில் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள். நீங்கள் வேலை இல்லாமல் இருந்தால், அல்லது குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தால், மார்ச் 2020க்கு முன் உங்களுக்கு ஒரு சிறப்பான வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டில் வேலை பார்க்க வரும் நாட்களில் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் மறைமுக எதிரிகள் பலம் இழப்பார்கள். உங்களுக்கு, மேல் நிலையில் வேலை பார்ப்பவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள்.


செப்டம்பர் 2020 முதல் நவம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் உங்களது கடுமையான உழைப்பை பார்த்து உங்கள் நிறுவனம் உங்களுக்கு சிறப்பான நிதி சன்மானங்களை தருவார்கள். நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் பெறுவதில் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு குடியேற்ற பலன்களும் கிடைக்கும். அரசு வேலை கிடைக்க இது நல்ல நேரம். சனி பகவான் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சிறப்பான நிலையில் சஞ்சரிக்கின்றார். நீங்கள் நீண்ட கால அடிப்படையில் உங்கள் உத்தியோகத்தில் நல்ல நிலையில் செட்டில் ஆக இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.



Prev Topic

Next Topic