![]() | 2020 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
தொழிலதிபர்களுக்கு இது ஒரு கடுமையான காலகட்டமாக இருக்கும். சனி பகவான் கடந்த 2.5 ஆண்டுகளாக உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்ட்டத்தை முற்றிலும் எடுத்திருக்கக் கூடும். தற்போது குருவால் நீங்கள் மேலும் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். உங்கள் தொழில் பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் சில பிரச்சனைகள் ஏற்படக் கூடும். சட்ட பிரச்சனைகளும் ஏற்படக் கூடும்.
உங்களுக்கு எதிரான சதி, துரோகம் மற்றும் அரசியல் அதிகமாக இருக்கக் கூடும். உங்கள் தொழிலை நீங்கள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் இருக்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் இக்கட்டான சூழலில் சிக்கிக் கொள்ளக் கூடும். இதனால் பண இழப்பும் ஏற்படக் கூடும். உங்கள் வங்கி கணக்கு திவாலானாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்கள் போட்டியாளர்களால் நீங்கள் நல்ல ப்ரோஜெக்டுகளை இழக்கவும் கூடும். உங்கள் சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் உங்கள் நிர்வாக செலவுகளை சமாளிக்க வேண்டிய சூழல் உண்டாகலாம்.
நீங்கள் உங்கள் புதுமையான யோசனைகளையும், திட்டங்களையும் முதலீட்டாலர்களிடமும், பெரும் முதலாளிகளிடமும் செயல்விளக்கம் கூறினாலும், அதன் மீது அவர்கள் பெரிதாக ஈடுபாடு காட்ட மாட்டார்கள். ஆனால், அவர்கள் உங்கள் யோசனைகளையும், திட்டங்களையும் திருடி, தங்கள் தேவைகளுக்காக செயல்படுத்திக் கொள்வார்கள். உங்கள் முதுகில் குத்தி துரோகம் செய்பவர்களால் உங்கள் மன நிம்மதி பெரிதும் பாதிக்கக் கூடும். சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் சவால் நிறைந்த நேரத்தை சந்திப்பார்கள். மேலும் பண இழப்பும் ஏற்படக் கூடும்.
Prev Topic
Next Topic