![]() | 2020 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
முக்கிய கிரகங்களான குரு, சனி பகவான், மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் ௮ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் நிதி நிலையை இந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாதிக்கக் கூடும். உங்கள் பண வரத்து, வேலை இழப்பு, எதிர் பாராத செலவுகள், மற்றும் அதிக வட்டி விகிதம், கடன் போன்ற காரணங்களால் பாதிக்கக் கூடும். மேலும் பண விடயங்களில் உங்கள் உறவினர்கள், குடும்பத்தினர்கள் அல்லது உறவினர்கள் உங்களை ஏமாற்றக் கூடும். இந்த 2020ஆம் ஆண்டு உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு வங்கியில் கடன் வாங்க சுருட்டி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
உங்கள் செலவுகளை சமாளிக்க நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டை நம்பி இருக்க வேண்டிய சூழல் இருக்கலாம். உங்கள் வங்கிக் கடன் அல்லது கடன் நிதி மறு பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பம் ஒப்புதல் பெறாமல் போகலாம். நீங்கள் வீடு வாங்க முயற்சி செய்தால், அதை விரைவாக பத்திர பதிவு செய்ய முடியாமல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும். அந்த கட்டிட நிறுவனம் தங்களது வங்கிக் கணக்கு திவாலாவதால், உங்களை ஏமாற்ற முயற்சி செய்யலாம். ஒரு நல்ல விலைக்கு உங்கள் சொத்தை விற்க முடியாமல் போகலாம். உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்கவும், அல்லது சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடவும் இது நல்ல நேரம் இல்லை.
தங்க நகைகள் வாங்க இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் பயணம் செய்ய முயற்சித்தால், திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் சொத்துகளையும், விலை உயர்ந்த பொருட்களை பாதுகாக்கவும், போதிய காப்பீட்டை எடுத்துக் கொள்வது நல்லது. முடிந்த வரை யாருக்கும் பணம் கடன் கொடுப்பதையோ, அல்லது கடன் வாங்குவதையோ முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது. குரு உங்கள் ராசியின் 9ஆம் வீடிருக்கு ஏப்ரல் 2020 முதல் 3 மாதங்களுக்கு பெயர்ந்த பின் உங்களுக்கு சிறப்பான நிவாரணம் கிடைக்கும். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், நவம்பர் 20, 2020 முதல் அடுத்த குரு பெயர்ச்சி ஏற்பட்டவுடன் உங்கள் சோதனை காலத்தில் இருந்து வெளி வந்து விடுவீர்கள்.
Prev Topic
Next Topic