2020 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

ஜனவரி 01, 2020 முதல் மார்ச் 29, 2020 வரை பிரச்சனைகள் தொடரும் (30 / 100)


இந்த ஆண்டின் தொடக்கத்தில் முக்கிய கிரகங்கள் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். இதனால் உங்களுக்கு அதிக தடைகளும், ஏமாற்றங்களும் ஏற்படக் கூடும். உங்களுக்கு எதிராராத மோசமான பலன்கள் ஏற்படக் கூடும். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு, இந்த மோசமான காலகட்டத்தை உங்கள் வாழ்க்கையில் கடக்க வேண்டும். உங்கள் மகா தசை அல்லது அந்தரதசை பலவீனமாக இருந்தால், உங்களுக்கு அதிக மன உளைச்சல் ஏற்படக் கூடும். அஷ்டம சனி காலத்தில் இருந்து ஜனவரி 23, 2020 அன்று வெளி வந்து விட்டாலும், இந்த பாகத்தில் நீங்கள் எந்த நிவாரணத்தையும் காண முடியாது.
எதிர்மறை சக்திகளால் உங்கள் மனம் மற்றும் உடல் பாதிக்கக் கூடும். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலத்தின் மீது கவனம் தேவை. வாகனம் ஊட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை உங்கள் மன நிம்மதியை எடுத்து விடக் கூடும். நீங்கள் யாரையாவது விரும்புகின்றீர்கள் என்றால், அவருடன் ஏற்படும் மன உளைச்சல்களால் உங்கள் சக்தியின் அளவு குறையும்.


திருமணம் ஆன தம்பதியினர் தங்கள் உறவில் அதிக கருத்துவேறுபாடுகளை சந்திப்பார்கள். உங்கள் குடும்பத்தினரை விட்டு பிரியாமல் இருக்கவும், சட்ட சண்டைகள் ஏற்படாமல் இருக்கவும், நீங்கள் அதிக பொறுமையோடு இருக்க வேண்டும். உங்கள் மீது தவறு இல்லையென்றாலும், நீங்கள் அவமானப்படும் சூழல் உண்டாகும். இதனால் உங்கள் நற்பெயரும் பாதிக்கக் கூடும். அலுவலகத்தில் நடக்கும் அரசியலால் உங்கள் உத்தியோகம் பாதிக்கக் கூடும். இதனால் நீங்கள் வேலையை இழக்கும் சூழலும் ஏற்படலாம். உங்களுக்கு வருமான வரி பிரச்சனைகள் மற்றும் சட்ட பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.
பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம், பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு பெரிய அளவு நிதி இழப்பை உண்டாக்கக் கூடும். தொழிலதிபர்கள் மோசமான நேரத்தை சந்திப்பதோடு, அதிக அளவிலான நிதி இழப்பையும் சந்திக்க நேரிடும். ஸ்பெகிலேடிவ் வர்த்தகம் செய்யவும், பங்கு சந்தை முதலீடுகள் செய்யவும் இது சரியான நேரம் இல்லை. ஒரு நல்ல ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று இந்த காலகட்டத்தை கடக்க முயற்சி செய்யுங்கள்.




Prev Topic

Next Topic