![]() | 2020 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | நான்காம் பாகம் |
நவம்பர் 20, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரை முன்னேற்றத்தின் தொடக்கம் (75 / 100)
இந்த பாகத்தை நீங்கள் அடையும் போது, உங்கள் சோதனை காலம் முடிவடைந்து இருக்கும். குரு உங்கள் ராசியின் பாக்ய ஸ்தானத்தில், சனி பகவானோடு இணைந்து சஞ்சரிப்பார். இந்த சஞ்சாரம் நீச்ச பங்க ராஜா யோகத்தை உருவாக்கும். எனினும், உங்கள் வளர்ச்சியின் அளவு, உங்களுக்கு எவ்வளவு விரைவாக நிவாரணம் கிடைக்கும் என்பதும் உங்கள் பிறந்த சாதகத்தை பொறுத்தே இருக்கும்.
இந்த பாகத்தை நீங்கள் அடைந்த உடன், உங்களால் கடந்த நாட்களில் நடந்த மோசமான சம்பவங்களை ஜீரணிக்க முடியும். நீங்கள் உங்களுக்கு ஏற்பட்ட உடல் நல பிரச்சனைகளில் இருந்தும், மன வலிகளில் இருந்தும் வெளி வருவீர்கள். நீங்கள் நேசிப்பவர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் குறையும். காதலர்கள் மன உளைச்சலில் இருந்து வெளி வருவார்கள். கடந்த மாதங்களில் உங்கள் நற்பெயர் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் இப்போது தேவையான நடவடிக்கைகள் எடுத்து உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிப்பீர்கள்.
உங்களுக்கு வேலை இல்லாமல் இருந்தால், வேலைக்கான நேர்காணலுக்கு உங்களை தயார் படுத்திக் கொள்ள இது நல்ல நேரம். உங்களுக்கு அடுத்த ஓரிரு மாதத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் விசா மற்றும் குடியேற்றம் குறித்த விடயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உங்களது மோசமான நீண்ட காலம் தற்போது முடிவுக்கு வருகின்றது. அடுத்த சில ஆண்டுகளுக்கு, 2021 முதல் எந்த தடைகளும் இல்லாமல் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள.
Prev Topic
Next Topic