2020 புத்தாண்டு உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

உடல் நலம்


இந்த 2020ஆம் ஆண்டில் நீங்கள் உங்கள் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும், உங்கள் வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டரின் மீது பயணம் செய்வது போல இருக்கும். உங்கள் உடல் உபாதைகள் மற்றும் மன உளைச்சல் அதிகமாக இருக்கும். உங்களுக்கு கவலை, தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்படக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்கள் பெற்றோர்களின் உடல் நலத்தை பெப்ரவரி 2020 முதல் பாதிக்கக் கூடும். உங்கள் நெருங்கிய உறவினர்கள், குறிப்பாக மனைவி/கணவன், குழந்தைகள், பெற்றோர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களுடன் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் உங்கள் மனக் கவலைகளை அதிகரிக்கக் கூடும்.
உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் மது மற்றும் புகை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடும். உங்கள் சொந்த விடயங்களை, யாரிடமும், அது உங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், கூட பகிர்வதை தவிர்ப்பது நல்லது. உங்கள் கட்டுபாடின்றி நீங்கள் சூதாட்டத்தில் ஈடுபடக் கூடும். தனிமையாக இருப்பது உங்களுக்கு பிரச்சனையை உருவாக்கக் கூடும். குறிப்பாக நீங்கள் வெளிநாட்டில் தனிமையில் இருந்தால், அது உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். நீங்கள் ஒரு நல்ல ஆலோசகரை அணுகி, ஆலோசனை பெற்று உங்கள் இந்த கடுமையான சூழலை கடக்க முயற்சி செய்யுங்கள். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஹனுமான் சாலிச கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.




Prev Topic

Next Topic