![]() | 2020 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 வரை குடிப்பிடத்தக்க முன்னேற்றம் (65 / 100)
இந்த பாகத்தில் கிரகங்கள் உங்கள் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறப்பான் மாற்றத்தை உண்டாக்கக் கூடும். நீங்கள் உங்கள் சக்தியை மீண்டும் பெறுவீர்கள். யோகா, மூச்சு பயிற்சி செய்து உங்கள் நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்வீர்கள். உங்களுக்கு ஏறபட்ட மோசமான சபவங்களை ஜீரணிக்க முயற்சி செய்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்வீர்கள்.
உங்களுக்கு ஏற்பட்டுள்ள உடல் உபாதைகள் குறையும். உங்கள் குடும்பத்தினர்களுடன் இருக்கும் உறவில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் விரும்புபவரை விட்டு பிரிந்து இருந்தால், தற்காலிகமாக உங்களுக்கு காதல் விடயங்களில் நல்ல நிவாரணம் கிடைக்கும். எனினும், இந்த நிவாரணம் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே என்பதால், நீங்கள் மீண்டும் ஒன்றாக சேர முயற்சிக்கும் முன் உங்கள் பிறந்த சாதகத்தின் பலனை பார்ப்பது நல்லது. உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். எனினும், நிச்சயமோ அலல்து திருமணமோ, இந்த பாக காலகட்டத்திற்குள்ளேயே நடந்து விடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால், அடுத்த பாகத்தில் உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், திருமணம் தடை பெற வாய்ப்பு உள்ளது.
நீங்கள் ஒரு நல்ல வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல வேலை குறைந்த சம்பளத்தில், ஒரு சாதாரண பதவியோடு கிடைக்கும். உங்கள் வேலை சுமையும், அலுவலகத்தில் இருக்கும் அரசியலும் குறையும். தொழிலதிபர்களுக்கு சிறிய ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். இதனால் பண வரத்து உண்டாகும். நீங்கள் உங்கள் கடனை அடைத்து மற்றும் கடனை நிதி மறு பரிசீலனை செய்து, மாதாந்திர தவணையை குறைத்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். இதனால் உங்கள் கடன் சுமை குறையும். உங்கள் நிதி நிலையில் ஓரளவிற்காவது முன்னேற்றம் ஏற்படும். எனினும், உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் மட்டுமே, பங்கு சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடுகள் உங்களுக்கு லாபத்தை தரக் கூடும். இந்த பாகத்தில் எந்த ரிஸ்க்கும் எடுக்கும் முன், உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து, அதன் பின்னர் அதன் பலத்தோடு முயற்சிகளை செய்வது நல்லது.
Prev Topic
Next Topic