![]() | 2020 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
இந்த 2020ஆம் ஆண்டு முக்கிய கிரகங்கள் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து, பங்கு சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்த விடயங்களில் உங்களுக்கு கடுமையான இழப்பை ஏற்படுத்தக் கூடும். ஒரே இரவில் பல ஆண்டுகளாக சேர்த்து வைத்த லாபத்தை நீங்கள் இழக்க கூடும். நீங்கள் இத்தகைய நிதி இழப்பை சந்தித்தால், அதில் இருந்து வெளி வர குறைந்தது 5 முதல் 1௦ ஆண்டுகள் ஆகலாம். முதலீடுகள் செய்ய உங்கள் நேரம் தற்போது மிக மோசமாக இருக்கும் இந்த நிலையில், நவம்பர் 2020 வரை எந்த விதமான பங்கு சந்தை முதலீடுகளும் செய்யாமல் இருப்பது நல்லது. பங்கு சந்தை வர்த்தகத்தை விட்டு முற்றிலும் விலகி இருப்பது நல்லது.
உங்கள் மகா தசை சாதகமாக இருந்தாலும், இந்த புது ஆண்டு உங்கள் முதலீடு குறித்த விடயங்களுக்கு ஒரு மோசமான காலமாக இருக்கும். கருப்பாக கட்டுமான நிறுவனம் வைத்திருப்பவர்கள் அலல்து ரியல் எஸ்டேட் ப்ரொஜெக்ட்டுகள் அல்லது முதலீடுகள் செய்பவர்கள் மோசமான பலன்களை சந்திக்க நேரிடும். இது குறிப்பாக அரசு கொண்டுவரும் சில மாற்றங்களாலும், துரோகங்களாலும் மற்றும் உங்கள் வங்கி கணக்கு திவாலாவதாலும் ஏற்படக் கூடும். நீங்கள் புது வீடு வாங்க முன் தொகை கொடுத்தால், அதனை அந்த கட்டுமான நிறுவனம் எடுத்துக் கொண்டு ஓடி விடக் கூடும். உங்கள் வீட்டில் குடி இருப்பவர்கள் உங்களுக்கு பிரச்சணைகளை ஏற்படுத்தக் கூடும். நீங்கள் நிலம் வைத்திருந்தாள், அதனாலும் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். குறிப்பாக பிறர் அந்த நிலத்தை பயன்படுத்துவதால் ஏற்படக் கூடும். உங்கள் பணத்தை பாதுகாப்பான முறையில், வங்கி சேமிப்பு, நிரந்திர வைப்பு நிதி, அரசு பத்திரம் போன்றவற்றில் முதலீடு செய்து வைப்பது நல்லது.
Prev Topic
Next Topic