![]() | 2020 புத்தாண்டு பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் |
பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள்
இந்த 2020ஆம் ஆண்டு பயணம் உங்களுக்கு சிறப்பாக இல்லை. எனினும், அவசர தேவைகளுக்காக நீங்கள் பயணிக்கக் கூடும். பயணத்தின் போது உங்களுக்கு அதிக பிரச்சனைகள் ஏற்படக் கூடும். உங்களுக்கு சரியான தங்கும் வசதி கிடைக்காமல் போகலாம். மேலும் நீங்கள் செல்லும் இடத்தை பற்றி போதிய தகவல் உங்களுக்கு தெரியாததால், அங்கிருக்கும் மக்கள் உங்களை ஏமாற்றக் கூடும். போதிய நண்பர்கள் இல்லாததால் உங்கள் சமூக வாழ்க்கை பாதிக்க கூடும். பயண சீட்டு, தங்கும் விடுதி போன்றவற்றை முன் பதிவு செய்வதில் உங்களுக்கு எந்த சலுகைகளும் கிடைக்காது. மேலும் நீங்கள் தங்கும் இடத்தில் உங்களுக்கு போதிய வசதிகள் இருக்காது. எனினும், கோவில் தளங்கள் மற்றும் புன்னியத்தளங்களுக்கு செல்ல திட்டமிடலாம்.
நீங்கள் வெளி நாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால், உங்களுக்கு விசா குறித்த பிரச்சனைகள் ஏற்படக் கூடும். உங்கள் கன்சல்டன்சி நிறுவனம் உங்கள் பாஸ் போர்ட் மற்றும் விசா குறித்த ஆவணங்களை தங்களுடனே வைத்துக் கொண்டு, உங்களை அதிக நேரம் எந்த ஓய்வும் இன்றி வேலை பார்க்க கட்டாயப்படுத்துவார்கள். கிரீன் கார்டு அல்லது நிரந்தர குடியுரிமை போன்ற எந்த விதமான குடியேற்ற பலன்களும் தற்போது உங்களுக்கு கிடைக்காது. நீங்கள் விசா ஸ்டம்பிங் செய்ய பயணம் செய்த வேண்டும் என்றால், சரியான காரணம் கூறாததால் உங்களால் அதற்கான முயற்சிகளை எடுக்க முடியாமல் போகலாம். விசா மற்றும் குடியேற்ற பலன்களை பெற வேண்டும் என்றால், உங்கள் சோதிடரை அணுகி, உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் பின்னர் எந்த முயற்சிகளையும் எடுப்பது நல்லது.
Prev Topic
Next Topic