![]() | 2020 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
இந்த 2020ஆம் ஆண்டு எந்த நல்ல நிகழ்வுகளோடும் தொடங்காது. நீங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழல் உண்டாகலாம். இது உங்களுக்கு ப்ராஜெக்ட் ரத்தாவது, செயல் திறன் குறைவு காரணமாக, மற்றும் நீங்கள் வேலை பார்க்கும் நிர்வாணம் உங்களை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்வது போன்ற காரணங்களால் ஏற்படக் கூடும். மேலும் நீங்கள் எதிர் பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காததால், நீங்கள் மேலும் ஏமாற்றம் அடையக் கூடும். இந்த 2020ஆம் ஆண்டு நீங்கள் முற்றிலுமாக உங்கள் எதிர்பார்ப்புகளை தவிர்த்து விடுவதோ அல்லது குறைத்துக் கொள்வதோ நல்லது.
உங்கள் மேலாளர் உங்களை மிக மோசமாக நடத்தக் கூடும். எனினும், உங்கள் உத்தியோகத்தை காப்பாற்றி கொள்ள நீங்கள் மிகப் பொறுமையாக அத்தகைய சூழலில் இருக்க வேண்டும். உங்கள் எச் ஆரிடம் யாரை பற்றியும் எந்த புகாரும் கூறாமல் இருப்பது நல்லது. அப்படி செய்தால், அது உங்களுக்கு மீண்டும் பாதிப்பை உண்டாக்கி, நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழலை உண்டாக்கி விடக் கூடும். உங்கள் உத்தியோக வாழ்க்கை பாதிக்கக் கூடும். நீங்கள் நல்ல முன்னேற்றம் இல்லாத ஒரு ப்ரோஜெக்ட்டில் வேலை பார்க்க கட்டாயப்படுத்தப்படுவீர்கள். மேலும் உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக நடக்கும் அரசியல் மற்றும் சதிகளால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். அனேக நேரங்களில் உங்கள் மீதுதான் பழி சுமத்தப்படுகின்றது அல்லது பாதிக்கப்படப் போகின்றவர் நீங்கள் தான் என்பதை உணராமல் நீங்கள் இருப்பீர்கள்.
குடும்பத்தில் இருக்கும் பெண்களைத் தவிர, அலுவலகம் மற்றும் சமூக வாழ்க்கையில் நீங்கள் கடந்து வரும் பெண்களிடம் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்களுக்கு உங்கள் உயர் அதிகாரி அல்லது மேல்லாளர் போன்றவர்களால் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். நீங்கள் நட்போடு அவர்களுடன் பழகினாலும், அவர்கள் அந்த உறவை தவறாக பயன்படுத்திக் கொள்ளக் கூடும். இதனால் உங்கள் நற்பெயர் பாதிக்கக் கூடும், இது உங்களை பற்றிய தேவையில்லாத வதந்திகளை பரப்பக் கூடும். உங்களுடன் வேலை பார்ப்பவருடன் நீங்கள் காதலில் விழுந்தால், அது இந்த ஆண்டில் நீங்கள் ஒரு மிக மோசமான சூழலை உங்கள் வாழ்க்கையில் சந்திப்பீர்கள் என்பதை உணர்த்தும். முடிந்த வரை உங்கள் உத்தியோகத்தை காப்பாற்றிக் கொள்ளவும், உங்கள் நற்பெயரையும், நான் மதிப்பையும் காப்பாற்றிக் கொள்ளவும், அத்தகைய உறவை வளர்க்காமல் இருப்பது நல்லது. நீங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் வேலை பார்க்கின்றீர்கள் என்றால், உங்கள் கன்சல்டிங் நிறுவணும், உங்கள் சம்பளத்தில் இருந்து ஒரு பெரியத் தொகையை எடுத்துக் கொள்ளக்கூடும்.
Prev Topic
Next Topic