![]() | 2020 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
கடந்த 2019ஆம் ஆண்டு தொழிலதிபர்களுக்கு அதிக இழப்புகள் ஏற்பட்டிருக்கும். ராகு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிலும், சனி பகவான் 4ஆம் வீட்டிலும், குரு 3ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையை மிக மோசமாக்கி இருந்திருப்பார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உங்கள் தொழிலில் அதிக நட்டம் ஏற்பட்டிருக்கும் அல்லது உங்கள் வங்கி கணக்கு திவாலாகி இருந்திருக்கும். நீங்கள் மேலும் அடுத்த ஓரிரு மாதங்களுக்கு இந்த 2020ஆம் ஆண்டு இந்த பின்னடைவுகளை சந்திக்க நேரிடும்.
மார்ச் 2020 முதல் தொழிலதிபர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து நீங்கள் நல்ல ப்ரோஜெச்ட்டுகளை மார்ச் 2020 முதல் பெறுவீர்கள். எந்த விதமான மறைமுக எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படாது. நல்ல திட்டங்களை வகுத்து உங்கள் தொழிலில் முன்னேற்றத்தை காண்பீர்கள். மேலும் உங்கள் நிதி பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வுகளை காண்பீர்கள். உங்கள் தொழிலை புதிய இடத்திருக்கு மாற்ற இது நல்ல நேரம்.
ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தி பயன்படுத்தி நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுத்து உங்கள் தொழிலில் முன்னேற்றத்தை காணலாம். சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகளை அதிகரித்தோ அல்லது சொந்த பிரச்சனைகளை அதிகரித்து, உங்களை தொழிலில் கவனம் செலுத்த விட முடியாமல் செய்யக் கூடும். இதனால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படலாம். எனினும், உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், இது ஒரு பிரச்சனையாக உங்களுக்கு இருக்காது.
Prev Topic
Next Topic