![]() | 2020 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
இந்த புது ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் நிதி நிலை மோசமாக இருக்கக் கூடும். நீங்கள் அதிகரிக்கும் கடனால் பீதி அடையும் நிலையில் இருப்பீர்கள். உங்களுக்கு பெப்ரவரி 2020 முதல் நல்ல சிறப்பான முன்னேற்றம் உங்கள் நிதி நிலையில் ஏற்படக் கூடும். உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்து, மாதாந்திர தவணையை குறைத்துக் கொள்ள முயற்சிக்க நல்ல நேரம். இந்த ஆண்டு நீங்கள் உங்கள் கடனை சமாளிக்கும் அளவிற்கு கொண்டு வந்து விடுவீர்கள்.
எனினும், சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து நீங்கள் சூதாட்டம் போன்ற விடயங்களுக்கு அடிமையாகக் கூடிய சூழலை உண்டாக்கக் கூடும். சனி பகவான் உங்கள் அதிர்ஷ்டத்தை சற்று எடுத்து விடக் கூடும். தேவையற்ற பயணம், சட்ட பிரச்சனைகள், வீடு மற்றும் வாகன பராமரிப்பு போன்ற காரணங்களால் உங்களுக்கு செலவுகள் உண்டாகக் கூடும். அதிகரிக்கும் செலவுகளால், உங்களால் பணத்தை சேமிக்க முடியாமல் போகலாம். இது உங்கள் பண வரத்தையும் பாதிக்கக் கூடும்.
ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு நல்ல உதவியாக இருப்பார்கள். நீங்கள் இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் நிதி நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல், புது வீடு வாங்க முயற்சிக்க இது நல்ல நேரம் இல்லை. நீங்கள் பணத்தை இழக்க மாட்டீர்கள் என்றலும், நீங்கள் வாங்கும் வீடு உங்களுக்கு அதிக பிரச்சனைகளை தரக் கூடும்.
Prev Topic
Next Topic