![]() | 2020 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | முதல் பாகம் |
ஜனவரி 01, 2020 முதல் மார்ச் 29, 2020 வரை நல்ல முன்னேற்றம் (60 / 100)
முக்கிய கிரகங்கள் அர்தாஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிபதால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் நிலை மிக மோசமாக இருக்கும். எனினும், உங்களது இந்த சோதனை காலம் சில நாட்களுக்கே. ஜனவரி 23, 2020 முதல் நீங்கள் சிறப்பான நிவாரணத்தை காண்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் நடக்கும் மோசமான சம்பவங்களில் இருந்து உங்களுக்கு சற்று மூச்சு விட இடம் கிடைக்கும்.
பெப்ரவரி 2020 முதல் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். சரியான மருந்து கிடைத்து விரைவாக குணமடைவீர்கள். எனினும், உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் எந்த நிவாரணமும் இல்லாமல் தொடரும். காதலர்கள் சவால் நிறைந்த நேரத்தை சந்திப்பார்கள். புது உறவை தொடங்க இது ஏற்ற நேரம் இல்லை. திருமணம் ஆன தம்பதியினர் அன்யுனியம் குறைந்து அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சுப காரியங்கள் நிகழ்த்துவதை தற்போது தவிர்ப்பது நல்லது.
எனினும், உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படும். தற்போது உங்களுக்கு இருக்கும் உத்தியோகத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையென்றால், நீங்கள் புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்யலாம். உங்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர்கள் பெப்ரவரி மாதம் முதல் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். உங்கள் நிதி நிலையிலும் நல்ல மாற்றம் ஏற்படும். எனினும், கடந்த மாதங்களில் உங்களுக்கு ஏற்பட்ட தோல்விகள் மற்றும் ஏமாற்றங்களால், உங்கள் தன்னம்பிக்கையின் அளவு குறைந்து இருக்கக் கூடும். நீங்கள் புதிதாக தொழில் தொடங்க எண்ணினால், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலம் இருக்க வேண்டும். இந்த பாகத்தில் ஸ்பெகுலேடிவ் வர்த்தகத்தை விட்டு விலகி இருப்பது நல்லது.
Prev Topic
Next Topic