2020 புத்தாண்டு உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

உடல் நலம்


கடந்த 2019ஆம் ஆண்டு உங்கள் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும். தற்போது குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் பிரச்சனைகளுக்கான மூல காரணத்தை கண்டறிந்து, சரியான தீர்வைப் பெற உதவுவார். சரியான மருந்துகளை எடுத்துக் கொள்வதாலும், சரியான உணவு முறையை பின்பற்றுவதாலும், உங்கள் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஜனவரி மற்றும் பெப்ரவரி 2020 ஆகிய மாதங்களில் உங்கள் பெற்றோர்களின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.
குரு உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு அதி சரமாய் ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தில் பெயருவதால், நீங்கள் நல்ல உடல் நலத்தை பெறுவீர்கள். எனினும், 7 ஆண்டுகளுக்கு பிறகு, குரு உங்கள் ஜென்ம ராசியை ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான 3 மாத காலகட்டத்திற்கு பார்வை இடுவார் என்பதை கவனத்தில் கொள்ளவும். குறைவான உடற் பயிற்சி மற்றும் எளிய மருந்துகள் எடுத்தாலும் கூட, உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பு சத்து, சர்க்கரையின் அளவு மற்றும் இரத்த கொதிப்பு ஆகியவை சீரான நிலையில் இருக்கும். நீங்கள் விளையாட்டில் இருந்தால், சிறப்பாக செயல்படுவீர்கள்.


எனினும், சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய குணத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், நீங்கள் தனிமையாக இருப்பதாலும், அல்லது சொந்த பிரச்சனைகளாலும், குறிப்பாக ஜூலை 2020 முதல் அக்டோபர் 2020 வரையிலான காலகட்டத்தில் உளவியல் ரீதியாக பாதிக்கப்படலாம். நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், அல்லது உங்கள் குடும்பத்தை விட்டு தொலை தூரத்தில் இருந்தால், உங்கள் உறவுகளை பிரிந்திருக்கும் தாக்கத்தை நீங்கள் அதிகம் உணருவீர்கள். மேலும் உங்கள் பிறந்த சாதக பலன் பலவீனமாக இருந்தல நீங்கள் மது, புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகவும் ஆகக் கூடும்.



Prev Topic

Next Topic