![]() | 2020 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் |
திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்
ஊடகத் துறையில் இருப்பவர்களும், அரசியலில் இருப்பவர்கள் கடந்த ஒரு ஆண்டு காலமாக முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக்காததால், அதிக இன்னல்களை சந்தித்திருந்திருப்பீர்கள். சனி பகவான் மற்றும் கேது இணைந்து சஞ்சரித்து ஜனவரி 23, 2020 வரை உங்கள் வளர்ச்சியை பாதித்திததோடு, உங்களுக்கு கசப்பான அனுபவங்களையும் தந்திருக்கக் கூடும்.
பெப்ரவரி 2020க்கு மேல் விடயங்கள் சற்று ஆறுதலான நிலைக்கு முன்னேறும். உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் குறையும். உங்கள் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், மற்றும் நடிகர்களுடன் இருந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை காண்பீர்கள். மேலும் உங்கள் ஒப்பந்தங்களும் மாற்றி அமைக்கப்படும். பெரிய ப்ரோஜெக்ட்டில் பணி புரிய, குறிப்பாக ஏப்ரல் 2020 வாக்கில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
எனினும், உங்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றம் உங்கள் உறவுகளுடன் அதிகரிக்கும் பிரச்சனைகளால் அதிகமாக இருக்கக் கூடும். உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் பின்னரே புதிய உறவை உங்கள் வாக்கையில் உருவாக்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். குறிப்பாக செப்டம்பர் முதல் நவம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் எந்த புதிய உறவையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அது உங்களுக்கு அதிக அளவிலான மன உளைச்சலை உண்டாக்கி விடக் கூடும்.
Prev Topic
Next Topic