![]() | 2020 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 வரை சிறப்பான நேரம் (85 / 100)
இந்த 2020ஆம் ஆண்டின் சிறந்த காலமாக இந்த பாகத்தை கூறலாம். குரு மகர ராசிக்கு அதி சரமாய் மார்ச் 29, 2020 அன்று பெயருகிறார். நீங்கள் உங்கள் உடல் உபாதைகளில் இருந்து முற்றிலும் வெளி வந்து விடுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கையின் அளவு அதிகரிக்கும். காதல் விடயங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் திருமணம் செய்து கொள்ள இது ஏற்ற நேரம். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். எனினும், குழந்தை பேரு பெற உங்கள் சாதக பலனை பார்க்க வேண்டும்.
உங்கள் வேலை சுமை மற்றும் பதற்றம் குறையும். உங்கள மேலாளர் மற்றும் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் நல்ல உறுதுணையாக இருப்பார்கள். புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்யவும், அல்லது தற்போது நீங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நிறுவனத்தில் உங்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை பற்றி பேசவும் இது நல்ல நேரம். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் இந்த பாகத்தில் ஒப்புதல் பெரும். தொழிலதிபர்கள் ஆச்சரியத்தக்க முன்னேற்றத்தை காண்பார்கள். உங்களுக்கு நல்ல ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். இதனால் பண வரத்தும் அதிகரிக்கும். உங்கள் தொழிலை விரிவுபடுத்தவும் இது நல்ல நேரம். தொழில் குறித்த பயணம் உங்களுக்கு பெரிய அளவு வெற்றியை பெற்றுக் கொடுக்கும்.
பண வரத்து அதிகரிப்பதால், நீங்கள் உங்கள் கடனை விரைவாக கட்டி விடுவீர்கள். மேலும் எந்த சிக்கலும் இன்றி, குறைந்த வட்டி விகிதத்திற்கு உங்களுக்கு வங்கி கடன் ஒப்புதல் பெரும்/ பங்கு சந்தை முதலீடுகள் இந்த பாகத்தில் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும்/ புது வாகனம் வாங்க அல்லது புது வீட்டிற்கு குடி பெயர இது நல்ல நேரம். எனினும், வரவிற்கும் அடுத்த பாகம் உங்களுக்கு அவ்வளவு சிறப்பாக இல்லாததால், இந்த பாகத்தில் நீங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து வாகனம் வாங்க அல்லது புது வீட்டிற்கு குடியேற முயற்சி செய்ய வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.
Prev Topic
Next Topic