2020 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

ஜூலை 01, 2020 முதல் நவம்பர் 20, 2020 வரை உளவியல் ரீதியாக பின்னடைவுகள் (45 / 100)


குரு பகவான் மீண்டும் 4ஆம் வீடான அர்தஷ்டம ஸ்தானத்திற்கு பெயருவார். உங்களுக்கு கடந்த மாதங்களில் கிடைத்த நிவாரணம் தற்போது முடிவடையும். குரு செப்டம்பர் 13, 2020 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார். நீங்கள் சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், அதனால் ஏற்படும் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கவனமாக இருக்க வேண்டும்.
இந்த பாகத்தில் நீங்கள் மோசமாக பாதிக்கப்படுவீர்கள். உங்கள் உடல் நலத்தை உங்களால் நல்ல நிலையில் கவனித்துக் கொள்ள முடியும். எனினும், உங்கள் மனதில் ஏற்படும் வலி மற்றும் அழுத்தம் உங்கள் மன நிம்மதியை எடுத்து விடக் கூடும். உங்கள் அலுவலகத்தில் சிறப்பாக செயலாற்றுவீர்கள். உங்கள் பதவி உயர்வை பற்றியும், சம்பள உயர்வை பற்றியும், அலுவலகத்தில் பேச்சுக்கள் எழும், எனினும், அலுவலாத்தில் யாரிடமும் மன ரீதியாக அதிக நெருக்கத்தோடு இருப்பதை தவிர்ப்பது நாளது. இதனால் உங்களுக்கு எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படக் கூடும். உங்கள் உத்தியோகத்தையும் நீங்கள் இழக்க நேரிடலாம். உங்கள் மேலாளர் உங்களுக்கு உறுதுணையாக இருந்தாலும், இந்த பாகத்தில் நீங்கள் சிறிதும் யோசிக்காமல் உங்கள் ராஜினமா கடிதத்தை கொடுத்து விடக் கூடும். அதனால் அவசர முடிவுகளை எடுக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.


உங்கள் நெருங்கிய குடும்பத்தினர்களுடன் இருக்கும் உறவில் கணவனமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினர்களுடன் ஏதாவது சட்ட பிரச்சனைகள் / சண்டைகள் இருந்தால், அது உங்களுக்கு சாதகமான பலனைத் தராது. சட்ட பிரச்சனைகள் உங்கள் மன வலியை அதிகப்படுத்தும். காதலர்கள் பொறுமையாக இருந்தால் மட்டுமே பிரிவை தவிர்க்க முடியும். உங்களுக்கு காதல் தோல்வி ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இதன் விளைவாக உங்களுக்கு அதிக மன உளைச்சல் ஏறபடக் கூடும். உங்கள் திருமணத்தை நிச்சயம் செய்யவோ அல்லது திருமணம் செய்யவோ இது ஏற்ற நேரம் இல்லை.


Prev Topic

Next Topic