![]() | 2020 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
பங்கு சந்தையில் நீண்ட கால முதலீடு செய்பவர்கள் மற்றும் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் செய்பவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு மிக மோசமான காலகட்டத்தை சந்தித்திருந்திருப்பார்கள். குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு உதவாமலும், வர்த்தகத்தில் உங்கள் அதிர்ஷ்டத்தை குறைத்தும் இருந்திருப்பார். நீங்கள் தொடர்ந்து அதிக நட்டத்தை சந்திக்கக் கூடும்./ அடுத்த ஆண்டும், சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த அதிர்ஷ்டமும் இருக்காது. ஜனவரி 2020 முதல் உங்கள் அதிர்ஷ்ட்டம் குறையும். நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்யாமல் இருந்தால் அடுத்த ஒரு ஆண்டுக்கு நீங்கள் பணத்தை இழக்க மாட்டீர்கள். இது மட்டுமே உங்களுக்கு பங்கு சந்தையில் இருக்கும் ஒரு நல்ல செய்தியாகும்.
உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். எனினும் பங்கு சந்தை வர்த்தகத்தை விட்டு விலகி, உங்கள் குடும்பத்தில் / வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்ய இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்யவும், புது வீடு வாங்கவும் நவம்பர் 2௦, 2020 வரை நேரம் ஏற்றதாக இல்லை. உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல், புது வீடு கட்ட முயற்சி செய்யாதீர்கள்.
Prev Topic
Next Topic