2020 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

வேலை / உத்தியோகம்


கடந்த 2019ஆம் ஆண்டு நீங்கள் மோசமான காலகட்டத்தை கண்டிருப்பீர்கள். நீங்கள் உங்கள் வேலையை இழந்திருந்தாலும், மேலும், உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடனும், உங்கள் நிறுவனத்திடமும் பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பெப்ரவரி 2020 வரை காத்திருந்தால், உங்கள் உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உங்களுக்கு தற்போது வேலை இல்லாமல் இருந்தால், உங்களுக்கு பெப்ரவரி 2020 வாக்கில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
உங்கள் அலுவலகத்தில் இருக்கும் அரசியல் பெப்ரவரி 2020 வாக்கில் குறையும். நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டில் வேலை பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் மேலாளர் உங்கள் வேலைகளை அங்கீகரிப்பார். அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். எனினும், உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடன் அதிக நெருக்கத்தோடு இருப்பதை தவிர்ப்பது நல்லது. இது உங்கள் வாழ்க்கையை மோசமாக மாற்றி விடக் கூடும்.


இந்த 2020ஆம் ஆண்டு உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருந்தாலும், உங்கள் அவசர முடிவுகளாலும், சில குணங்களாலும், அதனை நீங்கள் இழக்க நேரிடும். மேலும் உங்களுக்கு சொந்த பிரச்சனைகள் அதிகமாக இருப்பதால், உங்கள் உத்தியோக வளர்ச்சியிலும், பண விடயங்களில் நீங்கள் ஆர்வம் குறைந்து காணப்படுவீர்கள். நீங்கள் உங்கள் மனதை நிலைபடுத்திக் கொண்டு, உங்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை சமாளித்து, செப்டம்பர் 2020 முதல் நவம்பர் 2020 வரையிலான காலகட்டத்தை கடக்க வேண்டும்.



Prev Topic

Next Topic