![]() | 2021 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | கல்வி |
கல்வி
குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் பாகம் 1 மற்றும் 3-ல் சஞ்சரிப்பார். உங்கள் அடிப்பில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். நீங்கள் செய்த தவறுகளை உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். நல்ல பள்ளி மற்றும் பல்கலைகழகத்தில் பாகம் 1 மற்றும் 3-ல் உங்களுக்கு சேர்க்கை கிடைக்கும். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் சாதனைகளை கண்டு பெருமைப்படுவார்கள். விளையாட்டு மற்றும் போட்டி தேர்வுகளில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்,. உங்கள் வளர்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும் புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள்.
குரு உங்கள் ஜென்ம ஸ்தானத்திற்கு பாகம் 2 மற்றும் 4-ல் பெயர்ந்ததும், உங்களுக்கு மறைமுக எதிரிகளால் அதிக பிரச்சனைகள் வருவதை கவனிக்கலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் தீய நண்பர்கள் வட்டாரத்தில் சேர்ந்து, மது மற்றும் புகை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாக நேரலாம். உங்கள் மீது தவறு இல்லை என்றாலும், நீங்கள் குற்றம் சாட்டப்படுவீர்கள். ஒரு நல்ல ஆலோசகர் அல்லது உங்கள் பெற்றோர்களின் உதவி பெற்று, இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்வது நல்லது.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic