![]() | 2021 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | முதல் பாகம் |
ஜனவரி 1, 2020 முதல் ஏப்ரல் 05, 2021 வரை அதிக செலவுகள் 55 / 100)
சனி பகவான் மற்றும் குரு இணைந்து உங்கள் ராசியின் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்கள். உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். நீங்கள் நல்ல தூக்கத்தை இழப்பீர்கள். உங்கள் மனைவி/கணவன் மற்றும் அவரது வீட்டார்களுடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். இருப்பினும், இந்த காலகட்டத்தில் சுப காரியங்கள் நடத்தாலாம். ஆனால் உங்கள் செலவுகள் நீங்கள் திட்டமிட்டதை விட பல மடங்கு அதிகரிக்கும்.
உங்கள் வேலை பளு அதிகரித்துக் கொண்டே போகும். நீங்கள் கடுமையாக வேலை பார்த்தல் மட்டுமே, உங்களால் பதவி உயர்வுக்கு முயற்சி செய்ய முடியும். கடந்த சமீப காலத்தில் உங்களது வளர்ச்சியைக் கண்டு உங்கள் மீது பொறாமைப் பட்டு உங்களுக்கு எதிரான அரசியலை செய்வார்கள். இதனால் உங்கள் மன நிம்மதி பாதிக்கக் கூடும். தொழிலதிபர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். உங்கள ஏழரை சனியின் தாக்கம் வரும் ஆண்டுகளில் அதிகமாக இருக்கும் என்பதால், உங்கள் தொழிலை தொடர்ந்து நடத்தும் முன் உங்கள் பிறந்த சாதக பலனை பார்ப்பது நல்லது.
பயணம் ஏற்படும், ஆனால் அதிக செலவுகளும் இருக்கும். முடிந்த வரை பணத்தை சேமிக்க ஆடம்பர பொருட்களை வாங்குவதை தவிர்த்து விடுவது நல்லது. இந்த பக காலகட்டத்தில் பங்கு சந்தை வர்த்தகத்தை விட்டு விலகி இருப்பது நல்லது. அதிர்ஷ்ட சீட்டு மற்றும் சூதாட்டம் போன்றவற்றில் அதிர்ஷ்டம் இல்லாமல் இருக்கும். புது வீடு வாங்கி குடி பெயர முயற்சி செய்யலாம். இனி வரும் நாட்களில் ஏழரை சனியால் நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது என்பதால், இந்த பாகத்தில் நீங்கள் செட்டிலாகி விட முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic