![]() | 2021 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2021 புத்தாண்டு பலன்கள் – கும்ப ராசி
இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் ராகு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிலும், கேது 1௦ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பார்கள். எதிர்பாராவிதமாக உங்களால் எந்த பலனையும் இந்த சர்ப்ப கிரகங்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. உங்களுக்கு ஜனவரி 2020 முதல் ஏழரை சனி தொடங்கியுள்ளது. குருவும் தற்போது இந்த ஆண்டு நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. இதனால் உங்களுக்கு அதிக சவால்கள் உண்டாகும்.
உங்கள் உடல் நலம் மற்றும் உத்தியோகம் ஆகிய இரண்டிலும் உங்களுக்கு கசப்பான அனுபவங்கள் உண்டாகும். இந்த 2021ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் நீங்கள் சுப காரியங்கள் நடத்தாலாம், ஆனால் செலவுகள் அதிகமாக இருக்கும். விடயங்களை மேலும் மோசமாக்கும் விதமாக குருவும் உங்கள் ஜென்ம ராசிக்கு ஏப்ரல் 5, 2021 அன்று பெயர்ந்து விடுவார். ஏழரை சனியின் தாக்கமும், ஜென்ம குருவின் தாக்கமும் பாகம் 2 (ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை) மற்றும் பாகம் 4 (நவம்பர் 2௦, 2021 முதல் டிசம்பர் 31, 2021 வரை) அதிகமாக இருக்கும்.
இந்த ஆண்டு எந்த ரிஸ்கும் எடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. உங்கள் அணைத்து முதலீடுகளையும் பாதுகாப்பாக நிரந்தர வைப்புத் தொகை, வங்கி சேமிப்பு என்று மாற்றி விடுவது நல்லது. நீங்கள் கவனமாக இல்லை என்றால், இந்த 2021ஆம் ஆண்டின் இறுதி 3 மாதங்களில் நீங்கள் உங்கள் செல்வங்களை இழக்க நேரலாம். உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த கடுமையான ஆண்டை கடக்க முயற்சி செய்யுங்கள்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic