2021 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

???? 14, 2021 ????? ??????? 20, 2021 ??? ??????? ??????? (55 / 100)


குரு வக்கிர கதி அடைந்து மீண்டும் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு பெயருவார். உங்களுக்கு கடந்த பாகத்தை விட தற்போது சற்று நிவாரணம் கிடைக்கும். உங்களால் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. ஆனால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் குறையும். உங்கள் நிதி குறித்த விடயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த பாக காலகட்டத்தில் உங்கள் பணம் வீணாகலாம். இது குறிப்பாக வேலை இல்லாததால், அலல்து எதிர்பாராத மருத்துவ அல்லது பயண செலவுகளால் ஏற்படலாம். உங்கள் கட்டிட கட்டுமானம் போதிய நிதி இல்லாததால் அல்லது ஒப்பந்தத்தில் ஏற்படும் பிரச்சனைகளால் நிறுத்தப்படலாம்.
விடயங்கள் எந்த முன்னேற்றமும் இல்லமால் தேக்கம் அடையலாம். இதனால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். உங்கள் மனைவி/கணவனுடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலதிபர்கள் குறிப்பாக அக்டோபர் 2021 முதல் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பங்குதாரருடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். உங்களுக்கு வருமான வரி மற்றும் சட்ட பிரச்சனைகளும் ஏற்படலாம்.


முடிந்த வரை விபத்துகளை தவிர்க்க பயணம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. புது வாகனம் வாங்குவதை இந்த காலகட்டத்தில் தவிர்த்து விடுவது நல்லது. உங்கள் விசா மற்றும் குடியேற்றம் குறித்த பலன்கள் ஒப்புதல் பெறாமல் போகலாம். அப்படி ஒப்புதல் பெற வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும். பங்கு சந்தை முதலீடுகளை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. உங்கள் நிதி நிலை குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையின் இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க வேண்டும் என்றால், நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.


Prev Topic

Next Topic