2021 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

வேலை / உத்தியோகம்


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது சாதகமான ஆண்டு இல்லை. ஏழரை சனியின் தாக்கத்தை இந்த ஆண்டு அனேக காலத்தில் நீங்கள் உணரலாம். நீங்கள் எதை செய்தாலும் அதில் அதிக தடைகள் இருக்கும். வெற்றியை நோக்கி நீங்கள் செல்லும் பாது இலகுவாக இருக்காது. அதிக மறைமுக விடயங்கள் நடக்கும். நீங்கள் நிர்வாகத்தில் இருப்பவராக இருந்தால், உங்கள் ப்ராஜெக்ட்டுக்கு கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் அதனை முடித்து விடும் படி திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உங்கள் மீது தவறு இல்லை என்றாலும் பல விடயங்கள் தவறாக நடக்கலாம்.
உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் கடந்த சில ஆண்டுகள் உங்களுக்கு கிடைத்த விரைவான வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு பொறாமைப் படுவார்கள். கடுமையான வாக்குவாதங்களை தவிர்க்க நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். நீங்கள் கவனமாக இல்லை என்றால், வருமானத்தையும், உத்தியோகத்தையும் இழந்து பாகம் 2 மற்றும் 4-ல் அதிக இன்னல்களை சந்திக்க நேரலாம்.
அக்டோபர் 2021க்கு பிறகு விடயங்கள் ஒரே இரவில் தவறாக மாறலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்க நேரலாம். அலுவலகத்தில் நடக்கும் அரசியல் மற்றும் சதிகளால் நீங்கள் மிக மோசமாக பாதிக்கப்படலாம். உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து டிசம்பர் 2021 வாக்கில் நீங்கள் உங்கள் தாய்நாட்டிற்கு திரும்பும் சூழல் உண்டாகலாம். இந்த் 2021ஆம் ஆண்டு உங்கள் எதிர்பார்புகளை குறைத்துக் கொண்டு, தற்போது இருக்கும் நிலையிலேயே எந்த வளர்ச்சியையும் எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021




Prev Topic

Next Topic