2021 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


சனி பகவான், ராகு மற்றும் கேது இந்த 2021ஆம் ஆண்டு உங்களுக்கு கடினமான நேரத்தை உண்டாக்குவார்கள். முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை என்பதால் இது உங்களுக்கு ஒரு கடினமான ஆண்டாக இருக்கும். உங்கள் பண வரத்து பாதிக்கப்படலாம். கேது உங்களுக்கு தொழிலில் அதிக போட்டியை உண்டாக்குவார். உங்களுக்கு கிடைத்த நல்ல ப்ரோஜெக்ட்டை நீங்கள் உங்கள் மறைமுக எதிரிகள் உண்டாக்கிய சதிகளால் உங்கள் போட்டியாளர்களிடம் இழக்க நேரலாம். உங்கள் தொழிலை விரிவுபடுத்த முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்காது. பாகம் 1 மற்றும் 3-ல் உங்கள் நிர்வாக செலவுகளை குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் பாகம் 2 மற்றும் 4-ல் சஞ்சரிக்கும் போது உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். பிற முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை என்பதால் உங்கள் நிவாரணத்தின் வேகமும், வளர்ச்சியின் அளவும் உங்கள் பிறந்த சாதகத்தை பொறுத்தே உள்ளது. உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும். போட்டியாளர்களால் உங்களுக்கு ஏற்படும் அழுத்தத்தை நீங்கள் சமாளிக்கத் தொடங்குவீர்கள். சுயதொழில் புரிவோர்கள் மற்றும் கமிசன் ஏஜண்டுகள் பாகம் 2 மற்றும் 4-கில் சிறப்பாக செயல்படுவார்கள்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021


இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021



Prev Topic

Next Topic