![]() | 2021 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | முதல் பாகம் |
ஜனவரி 01, 2020 முதல் ஏப்ரல் 05, 2021 வரை எதிர்பாராத பின்னடைவுகள் (25 / 100)
குரு, சனி பகவான், செவ்வாய், ராகு மற்றும் கேது ஆகிய அணைத்து முக்கிய கிரகங்களும் இந்த காலகட்டத்தில் சாதகமற்ற நிலையில் சஞ்சரிகின்றனர். குரு மற்றும் சனி பகவான் இணைந்து சஞ்சரித்து உங்கள் சக்த்தியின் அளவை குறைத்து உங்களுக்கு உடல் நல பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். உங்களுக்கு எந்த அதிர்ஷ்டமும் இருக்காது. உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலத்தின் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அதிகரிக்கும் மருத்துவ மற்றும் பயண செலவுகள் உங்கள் நிதி நிலையை பாதிக்கக் கூடும்.
அலுவலகத்தில் அரசியல் அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் புதிதாக ஊழியர்கள் உங்கள் குழுவில் சேர்வதால் உங்கள் முக்கியத்துவத்தை நீங்கள் இழப்பீர்கள். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் தற்போது இருக்கும் நிலையிலேயே நீங்கள் உங்கள் உத்தியோகத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். உங்கள் உத்தியோக வாழ்க்கையை சமாளிக்க முடியாமல் போகலாம். தொழிலதிபர்கள் போட்டியாளர்கள் மற்றும் பங்குதாரர்களால் அதிக பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. விசா குறித்த விடயங்களில் அதிக தாமதங்கள் ஏற்படலாம். அதிகரிக்கும் செலவுகள் உங்கள் சேமிப்பை பாதிக்கும். பங்கு சந்தை வர்த்தகத்தில் ரிஸ்க் எடுக்க முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்காது. உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic