2021 புத்தாண்டு உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

உடல் நலம்


கேது உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும், சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு தூக்கம் இல்லாத இரவுகளையும், அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளையும் உண்டாக்குவார்கள். குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் போது, அனேக நேரங்களில் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பார். உங்களுக்கு சரியான மருந்துகள் கிடைத்து விரைவாக குணமடைவீர்கள். உங்கள் குடும்பத்தினர்களுக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம்.
இந்த ஆண்டு நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், அதற்கு போதிய ஓய்வை எடுக்க வேண்டும். அதிக வேலை பளுவும், அழுத்தமும் ஏற்படுவதால் நீங்கள் விரைவாகவே சோர்வடைந்து போகலாம். மேலும் சரியான தூக்கம் இல்லாமல் போகலாம். உங்கள் ஜீரணத் தன்மை சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள், மேலும், திட உணவுகளுக்கு பதிலாக அதிக பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றால், அதனை ஏப்ரல் 5, 2021க்கு முன் அல்லது நவம்பர் 2௦, 2021க்கு பிறகு செய்யலாம்.
குரு மற்றும் ராகுவின் பலத்தால் உங்கள் மருத்துவ செலவுகளை நீங்கள் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் ஈடுசெய்து விடலாம். தினமும் காலையில் ஆதித்ய ஹிருதயம் மற்றும் ஹனுமான் சாலிசா கேட்பதால் உங்களுக்கு அதிக பலம் உண்டாகும்.



முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021


மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021

Prev Topic

Next Topic