![]() | 2021 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | காதல் |
காதல்
நீங்கள் யாரையாவது விரும்புகின்றீர்கள் என்றால், காதல் விடயங்களில் இந்த ஆண்டு ஏற்ற இறக்கத்துடன் கலவையான பலன்கள் உங்களுக்கு உண்டாகும். 1 மற்றும் 3ஆம் பாகத்தில் உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்படலாம். நீங்கள் விரும்புபவருடன் உங்களுக்கு தேவையற்ற சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படலாம். உங்கள் காதல் விடயத்தால் உங்கள் இரண்டு குடும்பத்திற்கும் இடையே சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆன தம்பதியினர் அதிக சவால் நிறைந்த காலகட்டத்தை காண்பார்கள். குழந்தை பேறுக்கு திட்டமிட வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் பலமாக இருக்க வேண்டும்.
பாகம் 2 மற்றும் 4-கில் விடயங்கள் இலகுவாக இருக்கும். குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்து நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க உதவுவார். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். திருமணம் ஆன தம்பதியினர் அன்யுனியத்தோடு இருப்பார்கள். நவம்பர் 2021 வரை காத்திருந்து பின்னர் திருமணம் செய்து கொள்ள முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்கும். பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமத்தில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், குறிப்பாக 4ஆம் பாகத்தில் உங்களுக்கு ஏற்ற வரன் கிடைக்கும்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic