![]() | 2021 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2021 புத்தாண்டு பலன்கள் – மேஷ ராசி
ராகு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், கேது 8 ஆம் வீட்டிலும் இந்த புத்தாண்டில் சஞ்சரிப்பார்கள். ராகு மற்றும் கேதுவாகிய இரண்டு கிரகங்களும் உங்களுக்கு வளர்ச்சி தரும் வகையில் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து, உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் வளர்ச்சி குறித்த விடயங்களில் தடைகளை ஏற்படுத்துவார்.
குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் ஜனவரி 1, 2021 முதல் ஏப்ரல் 5, 2021 வரை சஞ்சரித்து அதிக பிரச்சனைகளை உண்டாக்குவார். இந்த காலகட்டத்தில் நீங்கள் சுப காரியங்கள் நடத்துவதை தவிர்த்து விட வேண்டும். அதிக வேலை பளுவும், பதற்றமும் இருக்கும். ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை குரு உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் நிதி நிலையில் சிறப்பான வளர்ச்சியைத் உண்டாக்குவார்.
ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை உள்ள காலகட்டம் உங்களுக்கு சோதனை காலமாக இருக்கும். இது குறிப்பாக குரு கும்ப ராசியில் ஜூன் 2௦, 2021 அன்று வக்கிர கதி அடைவதாலும், அக்டோபர் 17, 2021 அன்று மகர ராசியில் வக்கிர நிவர்த்தி அடைவதாலும் ஏற்படும். குரு மீண்டும் முன்னோக்கி கும்ப ராசிக்கு நவம்பர் 2௦, 2021 அன்று பெயருவார். மேலும், சனி பகவானும், மே 21, 2021 முதல் அக்டோபர் 11, 2021 வரையிலான காலகட்டத்தில் வக்கிர கதி அடைவார்.
இறுதியாக, குரு கும்ப ராசிக்கு நவம்பர் 2௦, 2021 அன்று பெயர்ந்ததும் இந்த ஆண்டில் மீதமுள்ள நாட்களுக்கு நீங்கள் நல்ல பலனை காணத் தொடங்குவீர்கள். இந்த ஆண்டை நான் நான்கு பாகங்களாக பிர்த்து, பலன்களை எழுதியுள்ளேன்.
ஏற்றமும் இறக்கும் இருக்கப் போகும் ஒரு ரோலர் கோஸ்டர் பயணமாக உங்களுக்கு இந்த ஆண்டு இருக்கும். பாகம் 2 மற்றும் 4-கில் நீங்கள் நல்ல பலனைக் காண்பீர்கள். இந்த காலகட்டத்தை பயன்படுத்தி நீங்கள் சுப காரியங்கள் நடத்தலாம், மற்றும் முக்கிய முடிவுகளையும் எடுக்கலாம். மூச்சு பயிற்சி செய்து, விஷ்ணு சஹாசர நாமம் கேட்டு உங்கள் நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic