2021 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்


திரைநட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் பாகம் 1 மற்றும் 3-ல் சில பின்னடைவுகளை சந்திப்பார்கள். விடயங்கள் தேக்கம் அடையலாம், மேலும் உங்கள் படப்பிடிப்பு எந்த திசையிலும் நகராமல் ஒரே நிலையில் இருக்கும். உங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளை நீங்கள் இழக்க நேரலாம். உங்கள் படத்தை இந்த காலகட்டத்தில் உங்களால் வெளியிட முடியாமல் போகலாம். அப்படியே வெளியானாலும், அது சிறப்பாக ஓடாமல் போகலாம்.
ஆனால் பாகம் 2 மற்றும் 4-ல் குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், குருவின் பலத்தால் நீங்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். அதிகரிக்கும் புகழ் மற்றும் ரசிகர்களின் எண்ணிக்கையால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆனால் சாதகமற்ற சனி பகவான் மற்றும் கேதுவின் பெயர்ச்சியால் உங்கள் வேலை பளு அதிகமாக இருக்கும். கடுமையான படபிடிப்பு வேலைகள் போய்க் கொண்டிருப்பதால் உங்களுக்கு போதிய தூக்கம் இல்லாமல் இருக்கும். ஆனால் நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருப்பீர்கள். இதனால் மக்களும், ஊடகங்களும் உங்களை நோக்கி ஈர்க்கப்படும்.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021


நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021


Prev Topic

Next Topic