![]() | 2021 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | இரண்டாம் பாகம் |
ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 20, 2021 வரை சிறப்பான நேரம் (75 / 100)
குரு உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு பெயர்ந்த பிறகு உங்கள் வாழ்க்கையின் அனைத்து விடயங்களிலும் இருக்கும் பிரச்சனைகளின் தாக்கம் குறையும். கடந்த பாகத்தில் நீங்கள் சந்தித்த தடைகளில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக வெளியில் வருவீர்கள். உங்கள் உடல் நல பிரச்சனைக்கான சரியான மருந்து உங்களுக்கு கிடைக்கும். உங்கள் மனைவி/கணவன் மற்றும் குடும்பத்தினர்களுடன் இருக்கும் உறவில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். இந்த பாகத்தில் நீங்கள் சுப காரியங்கள் நடத்தலாம்.
உங்கள் அலுவலாக்த்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பதை நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்களது கடின உழைப்பிற்கான அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு நல்ல உதவியாக இருக்கும் மேலாளர் உங்களுக்கு கிடைப்பார். உங்கள் வருமானம் அதிரிக்கும், ஆனால் அதே நேரம் உங்கள் செலவுகளும் குறையும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், ஒரு குறுகிய காலத்திலேயே உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
உங்கள் வங்கிக் கடன் இந்த காலகட்டத்தில் ஒப்புதல் பெரும். பயணம் உங்களுக்கு கலவையான பலனைத் தரும். குடியேற்றம் குறித்த விடயத்தில் உங்களுக்கு இருந்த பிரச்சனைகளில் இருந்து நீங்கள் வெளியில் வருவீர்கள்.
பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு மிதமான லாபத்தை தரும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்கள் பிறந்த சாதகத்தின் சிறப்பாக இருந்தால், அதன் உதவியால், நீங்கள் வீடு வாங்கி, புது வீட்டிற்கு குடி பெயர முயற்சிக்கலாம். உங்கள் வீட்டு கட்டுமான நிபுணருடன் உங்களுக்கு பிரச்சனை இருந்தால், அது இந்த காலகட்டத்தில் நல்ல தீர்வைப் பெரும். மொத்தத்தில் இந்த காலகட்டம் உங்களுக்கு சிறப்பாக உள்ளது.
Prev Topic
Next Topic