2021 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


பங்கு சந்தையில் நீண்ட கால முதலீடுகள் செய்பவர்களுக்கு இது ஒரு சவாலான ஆண்டாக இருக்கும். லாபம் மற்றும் நட்டம் இரண்டுக்கும் இடையில் நீங்கள் ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தை செய்வீர்கள். பாகம் 1 மற்றும் 3-ல் அனைத்து முக்கிய கிரகங்களும் சாதகமற்ற நிலையில் சஞ்சரிக்கும் போது நீங்கள் பணத்தை இழக்க நேரலாம். இந்த காலகட்டத்தில் பங்கு சந்தை வர்த்தகத்தை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்ல யோசனையாக இருக்கும். நீங்கள் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழக்கும் நிலை மட்டுமே இருக்கும்.
பாகம் 2 மற்றும் 4-ல் குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு பெயர்ந்த பிறகு, குருவின் பலத்தால் நீங்கள் சற்று சிறப்பாக செயல்படத் தொடங்குவீர்கள். உங்களால் குறிப்பிடத்தக்க அளவு லாபத்தை காண முடியும். ஆப்சன், ப்யூச்சர் மற்றும் கமாடிட்டீஸ் போன்ற வர்த்தகத்தில் உங்களால் பணம் ஈட்ட முடியும். உங்கள் அதிர்ஷ்டத்தை நீங்கள் அதிர்ஷ்ட சீட்டு மற்றும் சூதாட்டம் போன்றவற்றின் மூலம் முயற்சி செய்து பார்க்கலாம். சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் நீங்கள் உங்கள் பிறந்த சாதகத்தின் பலத்தை நிச்சயம் பார்க்க வேண்டும்.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021


நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021


Prev Topic

Next Topic