![]() | 2021 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | கல்வி |
கல்வி
குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் அனேக நேரங்கள் சஞ்சரிப்பதால், நீங்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள். கடந்த மாதங்களில் நீங்கள் செய்த தவறை உணர்ந்து தற்போது படிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். உங்களுக்கு நல்ல பள்ளி மற்றும் பல்கலைகழகத்தில் பாகம் 1 மற்றும் 3-ல் சேர்க்கை கிடைக்கும். உங்கள் குடும்பத்தினர்கள் உங்களது சாதனைகளைக் கண்டு பெருமைப்படுவார்கள். விளையாட்டு மற்றும் போட்டித் தேர்வுகளில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.
குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு பாகம் 2 மற்றும் 4-ல் பெயர்ந்த பிறகு உங்களுக்கு மறைமுக எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் தவறான நண்பர்கள் வட்டாரத்தில் சேர்ந்து மது மற்றும் புகை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாக நேரலாம். உங்கள் மீது தவறு இல்லை என்றாலும் நீங்கள் குற்றம் சாட்டப்படலாம். ஒரு நல்ல ஆலோசகர் அல்லது பெற்றோர்களின் ஆலோசனைப் பெற்று இந்த சோதனை காலத்தை நீங்கள் கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic