2021 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

நிதி / பணம்


202௦-ல் குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்த போது உங்கள் நிதி நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும். இந்த 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் நல்ல பலனை காண்பீர்கள். உங்கள் நிதி நிலையில் தொடர்ந்து முனேற்றம் ஏற்படும். உங்கள் கடன்களை நீங்கள் விரைவாக அடைக்கத் தொடங்குவீர்கள். உங்கள் வங்கிக் கடன் எந்த ஒரு சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். பாகம் 1 மற்றும் 3-ல் குரு மற்றும் ராகு நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். புது வீடு வாங்கி குடி பெயர நீங்கள் முயற்சிக்கலாம்.
பாகம் 2 மற்றும் 4-ல் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். பண விடயங்களில் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அல்லது தொழில் பங்குதாரர்கள் உங்களை ஏமாற்றக் கூடும். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெறாமல் போகலாம். நீங்கள் உங்கள் கடனை அடைக்க உங்கள் சொத்துக்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். திருட்டு நடக்கவும் வாய்ப்பு உள்ளது. அதிகரிக்கும் தேவையற்ற பயணம், மருத்துவம் மற்றும் சட்ட செலவுகளால் உங்கள் மன நிம்மதி பாதிக்கக் கூடும்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021


இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021



Prev Topic

Next Topic