2021 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

ஜனவரி 1, 2021 முதல் ஏப்ரல் 05, 2021 வரை பொற்காலம் (90 / 100)


குரு மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ராசியின் 7ஆம் வீடான களத்திற ஸ்தானத்தில் சஞ்சரிகின்றனர். இந்த சஞ்சாரம் நீச்ச பங்க ராஜ யோகத்தை இரண்டு கிரகங்களுக்கும் இடையே உண்டாக்குகின்றது. ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார்.
உங்கள் மன வலி மற்றும் பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். நீங்கள் நேசிப்பவர்களின் உடல் நலத்தில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக நீங்கள் சரி செய்து விடுவீர்கள். காதலர்கள் தங்கள் காதல் வாழ்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். சுப காரியங்கள் நடத்த இது ஒரு சிறப்பான நேரம். திருமணம் ஆனவர்கள் நல்ல அன்யுனியத்தோடு இருப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை பேறுக்கு காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாக்கியத்தைப் பெறுவார்கள்.



உங்கள் உத்தியோகத்தில் வளர்ச்சிப் பெற இது சிறப்பான நேரம். பெரிய நிறுவனத்தில் இருந்து நல்ல சம்பளத்தோடு உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நல்ல சம்பள உயர்வோடு அடுத்த நிலைக்கு உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். விசா மற்றும் குடியேற்றம் குறித்த விடயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். புது வீட்டிற்கு குடி பெயருவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வெளிநாட்டில் செட்டிலாகவும் உங்களுக்கு நல்ல வாய்புகள் கிடைக்கும்.





Prev Topic

Next Topic