2021 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

நவம்பர் 20, 2021 முதல் டிசம்பர் 31, 2021 வரை இழப்புகள் (25 / 100)


குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் பலம் பெறுவது உங்களுக்கு நல்ல செய்தியாக இருக்காது. எதிர்பாராத நிகழ்வுகள் இந்த பாகத்தின் காலகட்டத்தில் நடக்கலாம். விடயங்கள் உங்கள் கட்டுபாட்டை மீறி நடக்கலாம். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையின் இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும். தோல்விகள், அவமானங்கள் மற்றும் ஏமாற்றங்களால் உங்களுக்கு மன உளைச்சல்கள் ஏற்படலாம். சுப காரியங்கள் உங்கள் கட்டுப்பாடின்றி தள்ளிப் போகலாம் அல்லது ரத்தாகலாம்.
உங்கள் உத்தியோகம் குறித்த விடயங்களுக்கு இது ஒரு சவால் நிறைந்த காலகட்டமாக இருக்கும். உங்கள் வேலை பளு மற்றும் அழுத்தம் அதிகமாக இருக்கும். நீங்கள் 24/7 வேலை பார்த்தாலும், உங்கள் மேலாளரை மகிழ்ச்சி அடையச் செய்ய முடியாது. எந்த பலனும் இன்றி நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்க நேரலாம். சட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் மீது தவறு இல்லை என்றாலும், நீங்கள் குற்றம் சாட்டப்படலாம்.


முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. விசா மற்றும் குடியேற்றம் குறித்த விடயங்களில் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காமல் போகலாம். பணம் கடன் கொடுப்பதையோ, அல்லது பணம் கடன் வாங்குவதையோ தவிர்த்து விடுவது நல்லது. பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு நிதி இழப்புகளை உண்டாக்கும். உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்யுங்கள்.



Prev Topic

Next Topic