2021 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

காதல்


இந்த 2021ஆம் ஆண்டு காதலர்கள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், கண்டாக சனி நடை பெறுவதால், உங்கள் திறமைகள் மற்றும் கல்வி தகுதி போன்றவற்றில் உங்களை விட குறைவானவரை நீங்கள் திருமணத்திற்கு தேர்வு செய்ய நேரலாம். ஏப்ரல் 5, 2021க்கு முன் மற்றும் அக்டோபர் 15, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு திருமணம் நடக்கக் கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியத்தோடு பாகம் 1 மற்றும் பாகம் 3-ல் இருப்பார்கள்.
உங்களுக்கு ஒரு பலவீனமான விடயம் என்னவென்றால், சனி பகவான் பாகம் 2 மற்றும் 4-ல் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு பெயருவது தான். நீங்கள் விரும்புபவருடன் நீங்கள் மனதளவில் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பீர்கள், மேலும் அதிக உடைமையோடும் இருப்பீர்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்கள் இருவருக்கும் இடையே மூன்றாவதாக ஒரு நபர் வருகைத் தருவதால், உங்கள் உறவு பாதிக்கப்படலாம். தவறான ஒரு நபரிடம் நீங்கள் காதல் வயப்படக் கூடும். நீங்கள் உங்கள் காதலை தெரிவிக்க முயற்சி செய்தால், அதனால் நீங்கள் ஏமாற்றப்படலாம் அல்லது அவமானப்பட நேரலாம். இதனால் உங்களுக்கு மன உளைச்சல், மற்றும் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் முன் அவமானம் ஏற்படலாம்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021



இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021






Prev Topic

Next Topic