![]() | 2021 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2021 புத்தாண்டு பலன்கள் – கடக ராசி
இந்த 2021 புத்தாண்டின் தொடக்கத்தில் ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிலும், குரு மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பார்கள். இதனால் இந்த 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். ஆனால் ஏப்ரல் 2021க்கு மேல் விடயங்கள் இது போல இருக்காது.
ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரையிலான இரண்டாம் பாக காலகட்டத்தில் குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிபப்தால் உங்களுக்கு சவாலான நேரமாக இருக்கும். மேலும் கேது உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உறவுகள் குறித்த விடயங்களில் உங்களுக்கு சாதகமற்ற பலனைத் தருவார். இந்த காலகட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
3ஆம் பாகம், ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில்,உங்களுக்கு உயர்வுகள் ஏற்படும். குரு மீண்டும் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு பெயர்ந்து நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். இந்த காலகட்டத்தில் நீங்கள் எதை செய்தாலும் அதில் பெரும் அளவு வெற்றிப் பெறுவீர்கள். சமுதாயத்தில் நல்ல மதிப்பையும், நற்பெயரையும் பெறுவீர்கள். இந்த பாகத்தில் உங்கள் வாழ்க்கையில் செட்டிலாகி விடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
நவம்பர் 2௦, 2021 முதல் டிசம்பர் 31,வ் வரையிலான இறுதி பாகத்தில் குரு விரைவாக நகர்ந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு பெயர்ந்ததும் உங்களுக்கு எதிர்பாராத பின்னடைவுகள் ஏற்படும். எதிர்பாராத சாதகமற்ற செய்திகள் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வரலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்களுக்கு மன உளைச்சல்கள் ஏற்படலாம்.
உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த 2021ஆம் ஆண்டின் அனேக காலகட்டம் உங்களுக்கு சிறப்பாக இருப்பது தான்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic