![]() | 2021 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | இரண்டாம் பாகம் |
ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 20, 2021 வரை மோசமான நேரம் (25 / 100)
சனி பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிலும், குரு 8ஆம் வீட்டில் இந்த பாக காலகட்டத்தில் சஞ்சரிப்பார்கள். கேது உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்ப சூழலில் கசப்பான அனுபவத்தை உண்டாக்குவார். நீங்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் உங்கள் மீது அதிகம் பொறாமையும், கண் திரிஷ்டியும் விழுவதால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் மறைமுக எதிரிகள் பலம் பெறுவார்கள். உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்களுக்கு எதிரான சதிகள் நடக்கும்.
நீங்கள் நல்ல தூக்கத்தை இழக்கலாம். துரோகங்கள் மற்றும் சதிகளால் நீங்கள் பாதிக்கப்படலாம். குடும்பத்தில் அதிக பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் குழந்தைகள் உங்களிடம் புதிய தேவைகளை முன் வைப்பார்கள். திருமணம் ஆன தம்பதியினர் அன்யுனியம் குறைந்து காணப்படுவார்கள். சுப காரியங்கள் நடத்த இது ஏற்ற நேரம் இல்லை. உங்கள் உத்தியோக வாழ்க்கை அலுவலகத்தில் நடக்கும் அரசியலால் பாதிக்கபப்டலாம். உங்கள் முதலாளி உங்களை கண்காணிப்பார். எந்த பதவி உயர்வு, சம்பள உயர்வையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது.
தொழிலதிபர்கள் அதிக சவால்களை போட்டி மற்றும் சட்டம் குறித்த காரணங்களால் சந்திப்பார்கள். உங்கள் ந்திஹி நிலை பாதிக்கப்படும். குறிப்பாக வன விடயங்கில் நீங்கள் ஏமாற்றப்படலாம். பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு நிதி இழப்புகளை ஏற்படுத்தக் கூடும். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் ஒப்புதல் பெறாமல் போகலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து நீங்கள் தாய்நாடு திரும்பும் சூழல் ஏற்படலாம்.
Prev Topic
Next Topic