2021 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


தொழிலதிபர்களுக்கு இது மிகவும் சவால் நிறைந்த காலமாக இருக்கும். நீங்கள் கவனமாக இருந்து, சரியான முடிவுகள் எடுத்தாலும், அது நீங்கள் எதிர்பார்த்த பலனைத் தராமல் போகலாம். நீங்கள் சிறு தவறுகளால் உங்களுக்கு கிடைத்த நல்ல ப்ரோஜெக்ட்டை இழக்க நேரலாம். இது குறிப்பாக உங்கள் மறைமுக எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் சதிகளால் ஏற்படும். உங்களுக்கு எதிராக யார் செயல்படுகின்றார்கள் என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கும். பண விடயங்களில் நீங்கள் மிகவும் அதிகமான நம்பியவர்களே உங்களை ஏமாற்றக் கூடும்.
உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெறாமல் போகலாம். உங்களுக்கு கடன் கொடுத்தவர்கள், பணத்தை திருப்பி தருமாறு அல்லது அதிக வட்டி கொடுக்குமாறு உங்களுக்கு அதிக அழுத்தத்தை தருவார்கள். மேலும் மோசமான நிலையில், உங்கள் நிறுவனத்தை வேறு ஒருவரிடம் நீங்கள் இழக்க நேரலாம். உங்கள் கடன்களை அடைத்து விட நீங்கள் உங்கள் சொத்துக்களை விற்க நேரலாம். பாகம் 1 மற்றும் 3-ல் உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்கள் வங்கிக் கணக்கு திவாலாகி நீங்கள் வீதிக்கு வரும் நிலை உண்டாகலாம்.
பாகம் 2-ல் உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். ஆனால் உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் குறுகிய காலத்திற்கு மட்டுமே. பாகம் 3-ல் உங்களுக்கு சட்ட பிரச்சணைகள் ஏற்படலாம். உங்களுக்கு அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. நவம்பர் 2௦, 2021 வரை நீங்கள் கடுமையான சோதனை காலத்தில் இருப்பீர்கள். டிசம்பர் 2021 முதல் விடயங்கள் நல்ல முன்னேற்றம் பெரும்.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021





Prev Topic

Next Topic