![]() | 2021 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
இந்த 2021ஆம் ஆண்டு விடயங்கள் மோசமாகக் கூடும். ஜென்ம சனி மற்றும் ஜென்ம குருவின் கடுமையான தாக்கத்தை ஒரே நேரத்தில் நீங்கள் உணருவீர்கள். பாகம் 1 மற்றும் 3-ல் விடயங்கள் முற்றிலுமாக உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கும். உங்கள் மனைவி/கணவன், குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் உங்களக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் அதிகரிப்பதால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படும். இந்த காலகட்டத்தில் சுப காரியங்கள் நடத்த திட்டமிடுவது நல்ல யோசனையாக இருக்காது. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், பாகம் 1 மற்றும் 3-ல் உங்களக்கு அவப்பெயரும் ஏற்படலாம்.
பாகம் 2 மற்றும் 4-ல் குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்ப்தன் பலத்தால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இந்த காலகட்டத்தை பயன்படுத்தி நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நவம்பர் 2௦, 2021க்கு பிறகு நீங்கள் சுப காரியங்கள் நடத்தலாம். இந்த ஆண்டின் இறுதியில் உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic