2021 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

ஜனவரி 1, 2021 முதல் ஏப்ரல் 05, 2021 வரை துரோகங்கள் / இழப்புகள் (20 / 100)


ஒருவர் தன் வாழ்க்கையில் கடக்கக் கூடிய முகவும் மோசமான காலகட்டமாக இந்த பாகம் இருக்கும். அணைத்து முக்கிய கிரகங்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் மோசமான நிலையில் சஞ்சர்கின்றனர். இந்த காலகட்டத்தை அடைந்ததும் எந்த விடயமும் சரியாக நடக்காது. புது பிரச்சனைகள் உங்களை மேலும் பாதிக்கும். விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் கடவுள் வழிபாட்டின் மதிப்பு, ஆன்மிகம், சோதிடம், கர்மா போன்றவற்றின் மதிப்பை உணருவீர்கள்.
உங்கள் உடல் உபாதைகள் அதிகரிக்கும். உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்படும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். அத்தகைய செலவுகளை உங்களால் இன்சூரன்ஸ் மூலம் ஈடு செய்ய முடியாமல் போகலாம். குடும்பத்தில் பதற்றம் நிறைந்த நிலை ஏற்படலாம். உங்கள் மனைவி/கணவன், உறவினர்கள் மற்றும் குழந்தைகளுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் ஏற்படலாம். சுப காரியங்கள் நடத்த இது நல்ல நேரம் இல்லை. குழந்தை பேறுக்காக IVF போன்ற மருத்துவ சிகிச்சைகள் உங்களுக்கு ஏமாற்றத்தை தரக் கூடும்.


உங்கள் உத்தியோக வாழ்க்கை அதிக சதிகளால் பாதிக்கப்படும். உங்கள் மீது தவறு இல்லை என்றாலும் நீங்கள் குற்றம் சாட்டப்படுவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் நிலை ஏற்படலாம். உங்கள் நிதி நிலை மோசமாக இருக்கும். முதலீடுகளில் நீங்கள் பணத்தை இழக்க நேரலாம். பண விடயங்களில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களை ஏமாற்றுவார்கள். மொத்தத்தில் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு, நீங்கள் உங்கள் வாழ்க்கையின் இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க முயர்ச்சி செய்ய வேண்டும்.


Prev Topic

Next Topic